|
|
1. லேவிக்குப் பிறந்த கோகாத்தின் மகனாகிய இத்சேயாரின் மகன் கோராகு என்பவன் ரூபன் வம்சத்திலுள்ள எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் பேலேத்தின் மகனாகிய ஓனையும் கூட்டிக்கொண்டு,
|
1. Now Korah H7141 , the son H1121 of Izhar H3324 , the son H1121 of Kohath H6955 , the son H1121 of Levi H3878 , and Dathan H1885 and Abiram H48 , the sons H1121 of Eliab H446 , and On H203 , the son H1121 of Peleth H6431 , sons H1121 of Reuben H7205 , took H3947 men :
|
2. இஸ்ரவேல் மக்களில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்திற்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய 250 பேர்களோடும் கூட மோசேக்கு முன்பாக எழும்பி,
|
2. And they rose up H6965 before H6440 Moses H4872 , with certain H376 of the children H4480 H1121 of Israel H3478 , two hundred H3967 and fifty H2572 princes H5387 of the assembly H5712 , famous H7148 in the congregation H4150 , men H376 of renown H8034 :
|
3. மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூட்டம்கூடி, அவர்களை நோக்கி: “நீங்கள் மிஞ்சிப்போகிறீர்கள்; சபையார் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்; யெகோவா அவர்கள் நடுவில் இருக்கிறாரே; இப்படியிருக்க, யெகோவாவுடைய சபைக்கு மேலாக உங்களை ஏன் உயர்த்துகிறீர்கள்” என்றார்கள்.
|
3. And they gathered themselves together H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , and said H559 unto H413 them, Ye take too much H7227 upon you, seeing H3588 all H3605 the congregation H5712 are holy H6918 , every one H3605 of them , and the LORD H3068 is among H8432 them: wherefore H4069 then lift ye up yourselves H5375 above H5921 the congregation H6951 of the LORD H3068 ?
|
4. மோசே அதைக் கேட்டபோது, முகங்குப்புற விழுந்தான்.
|
4. And when Moses H4872 heard H8085 it , he fell H5307 upon H5921 his face H6440 :
|
5. பின்பு அவன் கோராகையும் அவனுடைய எல்லாக் கூட்டத்தையும் நோக்கி: “நாளைக்குக் யெகோவா தம்முடையவன் இன்னான் என்றும், தம் அருகில் சேரத் தாம் கட்டளையிட்ட பரிசுத்தவான் இன்னான் என்றும் காண்பிப்பார்; அப்பொழுது எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவனைத் தம்மிடத்தில் சேரக் கட்டளையிடுவார்.
|
5. And he spoke H1696 unto H413 Korah H7141 and unto H413 all H3605 his company H5712 , saying H559 , Even tomorrow H1242 the LORD H3068 will show H3045 H853 who H834 are his , and who is holy H6918 ; and will cause him to come near H7126 unto H413 him : even him whom H834 he hath chosen H977 will he cause to come near H7126 unto H413 him.
|
6. ஒன்று செய்யுங்கள்; கோராகே, கோராகின் கூட்டத்தார்களே, நீங்கள் எல்லோரும் தூபகலசங்களை எடுத்துக்கொண்டு,
|
6. This H2063 do H6213 ; Take H3947 you censers H4289 , Korah H7141 , and all H3605 his company H5712 ;
|
7. நாளைக்கு அவைகளில் அக்கினி போட்டு, யெகோவாவுடைய சந்நிதியில் தூபவர்க்கம் போடுங்கள்; அப்பொழுது யெகோவா எவனைத் தெரிந்துகொள்வாரோ, அவன் பரிசுத்தவானாக இருப்பான்; லேவியின் சந்ததியாராகிய நீங்களே மிஞ்சிப்போகிறீர்கள்” என்றான்.
|
7. And put H5414 fire H784 therein , and put H7760 incense H7004 in H5921 them before H6440 the LORD H3068 tomorrow H4279 : and it shall be H1961 that the man H376 whom H834 the LORD H3068 doth choose H977 , he H1931 shall be holy H6918 : ye take too much H7227 upon you , ye sons H1121 of Levi H3878 .
|
8. பின்னும் மோசே கோராகை நோக்கி: “லேவியின் சந்ததியாரே, கேளுங்கள்;
|
8. And Moses H4872 said H559 unto H413 Korah H7141 , Hear H8085 , I pray you H4994 , ye sons H1121 of Levi H3878 :
|
9. யெகோவாவுடைய வாசஸ்தலத்தின் பணிவிடைகளைச் செய்யவும், சபையாரின் முன்நின்று அவர்கள் செய்யவேண்டிய வேலைகளைச் செய்யவும், உங்களைத் தம் அருகில் சேரச்செய்யும்படி இஸ்ரவேலின் தேவன் இஸ்ரவேல் சபையாரிலிருந்து உங்களைப் பிரித்தெடுத்ததும்,
|
9. Seemeth it but a small thing H4592 unto H4480 you, that H3588 the God H430 of Israel H3478 hath separated H914 you from the congregation H4480 H5712 of Israel H3478 , to bring you near H7126 H853 to H413 himself to do H5647 H853 the service H5656 of the tabernacle H4908 of the LORD H3068 , and to stand H5975 before H6440 the congregation H5712 to minister H8334 unto them?
|
10. அவர் உன்னையும் உன்னோடு லேவியின் சந்ததியாராகிய உன்னுடைய எல்லாச் சகோதரனையும் சேரச்செய்ததும், உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?
|
10. And he hath brought thee near H7126 H853 to him , and all H3605 thy brethren H251 the sons H1121 of Levi H3878 with H854 thee : and seek H1245 ye the priesthood H3550 also H1571 ?
|
11. இதற்காக நீயும் உன்னுடைய கூட்டத்தார் அனைவரும் யெகோவாவுடைய விரோதமாகவே கூட்டம்கூடினீர்கள்; ஆரோனுக்கு விரோதமாக நீங்கள் முறுமுறுக்கிறதற்கு அவன் யார்” என்றான்.
|
11. For which cause H3651 both thou H859 and all H3605 thy company H5712 are gathered together H3259 against H5921 the LORD H3068 : and what H4100 is Aaron H175 , that H3588 ye murmur H3885 against H5921 him?
|
12. பின்பு மோசே எலியாபின் மகன்களாகிய தாத்தானையும் அபிராமையும் அழைத்தனுப்பினான். அவர்கள்: “நாங்கள் வருகிறதில்லை;
|
12. And Moses H4872 sent H7971 to call H7121 Dathan H1885 and Abiram H48 , the sons H1121 of Eliab H446 : which said H559 , We will not H3808 come up H5927 :
|
13. இந்த வனாந்திரத்தில் எங்களைக் கொன்றுபோடும்படி, நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திலிருந்து எங்களைக் கொண்டு வந்தது அற்பகாரியமோ, எங்கள்மேல் அதிகாரமும் செய்யப்பார்கிறாயோ?
|
13. Is it a small thing H4592 that H3588 thou hast brought us up H5927 out of a land H4480 H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 , to kill H4191 us in the wilderness H4057 , except H3588 thou make thyself altogether a prince H8323 H8323 H1571 over H5921 us?
|
14. மேலும் நீ எங்களைப் நல்ல விளைச்சல் உள்ள செழிப்பான தேசத்திற்குக் கொண்டுவந்ததும் இல்லை, எங்களுக்கு வயல்களையும் திராட்சைத்தோட்டங்களையும் சுதந்தரமாகக் கொடுத்ததும் இல்லை; இந்த மனிதர்களுடைய கண்களைப் பிடுங்கப்பார்க்கிறாயோ? * இந்த ஜனங்களை வஞ்சிக்க பார்க்கிறாயோ நாங்கள் வருகிறதில்லை” என்றார்கள்.
|
14. Moreover H637 thou hast not H3808 brought H935 us into H413 a land H776 that floweth H2100 with milk H2461 and honey H1706 , or given H5414 us inheritance H5159 of fields H7704 and vineyards H3754 : wilt thou put out H5365 the eyes H5869 of these H1992 men H376 ? we will not H3808 come up H5927 .
|
15. அப்பொழுது மோசேக்குக் கடுங்கோபம் மூண்டது; அவன் யெகோவாவை நோக்கி: “அவர்கள் செலுத்தும் காணிக்கையை அங்கீகரியாமல் இருப்பீராக; நான் அவர்களிடம் ஒரு கழுதையைக் கூட எடுத்துக்கொள்ளவில்லை; அவர்களில் ஒருவனுக்கும் யாதொரு தீங்கு செய்யவும் இல்லை” என்றான்.
|
15. And Moses H4872 was very wroth H2734 H3966 , and said H559 unto H413 the LORD H3068 , Respect H6437 H413 not H408 thou their offering H4503 : I have not H3808 taken H5375 one H259 ass H2543 from H4480 them, neither H3808 have I hurt H7489 H853 one H259 of H4480 them.
|
16. பின்பு மோசே கோராகை நோக்கி: “நீயும் உன்னுடைய கூட்டத்தார் யாவரும் நாளைக்குக் யெகோவாவுடைய சந்நிதியில் வாருங்கள்; நீயும் அவர்களும் ஆரோனும் வந்திருங்கள்.
|
16. And Moses H4872 said H559 unto H413 Korah H7141 , Be H1961 thou H859 and all H3605 thy company H5712 before H6440 the LORD H3068 , thou H859 , and they H1992 , and Aaron H175 , tomorrow H4279 :
|
17. உங்களில் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் தூபவர்க்கத்தைப் போட்டு, தங்கள் தங்கள் தூபகலசங்களாகிய 250 தூபகலசங்களையும் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவரவேண்டும்; நீயும் ஆரோனும் தன் தன் தூபகலசத்தைக் கொண்டுவாருங்கள்” என்றான்.
|
17. And take H3947 every man H376 his censer H4289 , and put H5414 incense H7004 in H5921 them , and bring H7126 ye before H6440 the LORD H3068 every man H376 his censer H4289 , two hundred H3967 and fifty H2572 censers H4289 ; thou H859 also , and Aaron H175 , each H376 of you his censer H4289 .
|
18. அப்படியே அவரவர் தங்கள் தங்கள் தூபகலசங்களை எடுத்து, அவைகளில் அக்கினியையும் தூபவர்க்கத்தையும் போட்டு, ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாக வந்து நின்றார்கள்; மோசேயும் ஆரோனும் அங்கே நின்றார்கள்.
|
18. And they took H3947 every man H376 his censer H4289 , and put H5414 fire H784 in H413 them , and laid H7760 incense H7004 thereon H413 , and stood H5975 in the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 with Moses H4872 and Aaron H175 .
|
19. அவர்களுக்கு விரோதமாகக் கோராகு சபையையெல்லாம் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு முன்பாகக் கூடிவரும்படி செய்தான்; அப்பொழுது யெகோவாவுடைய மகிமை சபைக்கெல்லாம் காணப்பட்டது.
|
19. And Korah H7141 gathered H6950 H853 all H3605 the congregation H5712 against H5921 them unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 : and the glory H3519 of the LORD H3068 appeared H7200 unto H413 all H3605 the congregation H5712 .
|
20. யெகோவா மோசேயோடும் ஆரோனோடும் பேசி:
|
20. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 and unto H413 Aaron H175 , saying H559 ,
|
21. “இந்தச் சபையை விட்டுப் பிரிந்து போங்கள்; ஒரு நிமிடத்திலே அவர்களை அழித்துப்போடுவேன்” என்றார்.
|
21. Separate yourselves H914 from among H4480 H8432 this H2063 congregation H5712 , that I may consume H3615 them in a moment H7281 .
|
22. அப்பொழுது அவர்கள் முகங்குப்புற விழுந்து: “தேவனே, மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்கச் சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம்கொள்வீரோ” என்றார்கள்.
|
22. And they fell H5307 upon H5921 their faces H6440 , and said H559 , O God H410 , the God H430 of the spirits H7307 of all H3605 flesh H1320 , shall one H259 man H376 sin H2398 , and wilt thou be wroth H7107 with H5921 all H3605 the congregation H5712 ?
|
23. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
|
23. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
24. “கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தை விட்டு விலகிப்போங்கள் என்று சபையாருக்குச் சொல்” என்றார்.
|
24. Speak H1696 unto H413 the congregation H5712 , saying H559 , Get you up H5927 from about H4480 H5439 the tabernacle H4908 of Korah H7141 , Dathan H1885 , and Abiram H48 .
|
25. உடனே மோசே எழுந்திருந்து, தாத்தான் அபிராம் என்பவர்களிடம் போனான்; இஸ்ரவேலின் மூப்பர்களும் அவனைப் பின்சென்று போனார்கள்.
|
25. And Moses H4872 rose up H6965 and went H1980 unto H413 Dathan H1885 and Abiram H48 ; and the elders H2205 of Israel H3478 followed H1980 H310 him.
|
26. அவன் சபையாரை நோக்கி: “இந்தப் பொல்லாத மனிதர்களின் எல்லா பாவங்களிலும் நீங்கள் வாரிக்கொள்ளப்படாதபடி, அவர்கள் கூடாரங்களை விட்டு விலகி, அவர்களுக்கு உண்டானவைகளில் ஒன்றையும் தொடாமலிருங்கள்” என்றான்.
|
26. And he spoke H1696 unto H413 the congregation H5712 , saying H559 , Depart H5493 , I pray you H4994 , from H4480 H5921 the tents H168 of these H428 wicked H7563 men H376 , and touch H5060 nothing H408 H3605 of theirs, lest H6435 ye be consumed H5595 in all H3605 their sins H2403 .
|
27. அப்படியே அவர்கள் கோராகு தாத்தான் அபிராம் என்பவர்களுடைய இடத்தைவிட்டு விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் வெளியே வந்து, தங்களுடைய மனைவிகள் பிள்ளைகள் குழந்தைகளோடும் தங்களுடைய கூடாரவாசலிலே நின்றார்கள்.
|
27. So they got up H5927 from H4480 H5921 the tabernacle H4908 of Korah H7141 , Dathan H1885 , and Abiram H48 , on every side H4480 H5439 : and Dathan H1885 and Abiram H48 came out H3318 , and stood H5324 in the door H6607 of their tents H168 , and their wives H802 , and their sons H1121 , and their little children H2945 .
|
28. அப்பொழுது மோசே: “இந்தக் கிரியைகளையெல்லாம் செய்கிறதற்குக் யெகோவா என்னை அனுப்பினார் என்றும், அவைகளை நான் என்னுடைய மனதின்படியே செய்யவில்லை என்றும், நீங்கள் எதினாலே அறிவீர்களென்றால்,
|
28. And Moses H4872 said H559 , Hereby H2063 ye shall know H3045 that H3588 the LORD H3068 hath sent H7971 me to do H6213 H853 all H3605 these H428 works H4639 ; for H3588 I have not H3808 done them of mine own mind H4480 H3820 .
|
29. எல்லா மனிதர்களும் சாகிறபடி இவர்கள் செத்து, எல்லா மனிதர்களுக்கும் நேரிடுகிறதுபோல இவர்களுக்கும் நேரிட்டால், யெகோவா என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள்.
|
29. If H518 these H428 men die H4191 the common death H4194 of all H3605 men H120 , or if they be visited H6485 after H5921 the visitation H6486 of all H3605 men H120 ; then the LORD H3068 hath not H3808 sent H7971 me.
|
30. யெகோவா ஒரு புதிய காரியத்தை நேரிடச்செய்வதால், பூமி தன்னுடைய வாயைத்திறந்து, இவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கும்படியாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதென்றால், இந்த மனிதர்கள் யெகோவாவை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்றான்.
|
30. But if H518 the LORD H3068 make H1254 a new thing H1278 , and the earth H127 open H6475 H853 her mouth H6310 , and swallow them up H1104 H853 , with all H3605 that H834 appertain unto them , and they go down H3381 quick H2416 into the pit H7585 ; then ye shall understand H3045 that H3588 these H428 men H376 have provoked H5006 H853 the LORD H3068 .
|
31. அவன் இந்த வார்த்தைகளையெல்லாம் சொல்லி முடித்தவுடனே, அவர்கள் நின்றிருந்த நிலம் பிளந்தது;
|
31. And it came to pass H1961 , as he had made an end H3615 of speaking H1696 H853 all H3605 these H428 words H1697 , that the ground H127 cleaved asunder H1234 that H834 was under H8478 them:
|
32. பூமி தன்னுடைய வாயைத் திறந்து, அவர்களையும் அவர்களுடைய வீடுகளையும், கோராகுக்குரிய எல்லா மனிதர்களையும், அவர்களுக்கு உண்டான எல்லா பொருள்களையும் விழுங்கியது.
|
32. And the earth H776 opened H6605 H853 her mouth H6310 , and swallowed them up H1104 H853 , and their houses H1004 , and all H3605 the men H120 that H834 appertained unto Korah H7141 , and all H3605 their goods H7399 .
|
33. அவர்கள் தங்களுக்கு உண்டானவை எல்லாவற்றோடும் உயிரோடு பாதாளத்தில் இறங்கினார்கள்; பூமி அவர்களை மூடிக்கொண்டது; இப்படிச் சபையின் நடுவிலிருந்து அழிந்துபோனார்கள்.
|
33. They H1992 , and all H3605 that H834 appertained to them , went down H3381 alive H2416 into the pit H7585 , and the earth H776 closed H3680 upon H5921 them : and they perished H6 from among H4480 H8432 the congregation H6951 .
|
34. அவர்களைச் சுற்றிலும் இருந்த இஸ்ரவேலர்கள் யாவரும் அவர்கள் கூக்குரலைக்கேட்டு, பூமி நம்மையும் விழுங்கிப்போடும்” என்று சொல்லி ஓடினார்கள்.
|
34. And all H3605 Israel H3478 that H834 were round about H5439 them fled H5127 at the cry H6963 of them: for H3588 they said H559 , Lest H6435 the earth H776 swallow us up H1104 also .
|
35. அக்கினி யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து புறப்பட்டு, தூபங்காட்டின 250 பேரையும் பட்சித்துப் போட்டது.
|
35. And there came out H3318 a fire H784 from H4480 H854 the LORD H3068 , and consumed H398 the H853 two hundred H3967 and fifty H2572 men H376 that offered H7126 incense H7004 .
|
36. பின்பு யெகோவா மோசேயை நோக்கி:
|
36. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
37. “நெருப்பிற்குள் அகப்பட்ட தூபகலசங்களை எடுத்து, அவைகளிலிருக்கிற அக்கினியை அப்பாலே கொட்டிப்போடும்படி ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசாருக்குச் சொல்; அந்தத் தூபகலசங்கள் பரிசுத்தமானது.
|
37. Speak H559 unto H413 Eleazar H499 the son H1121 of Aaron H175 the priest H3548 , that he take up H7311 H853 the censers H4289 out of H4480 H996 the burning H8316 , and scatter H2219 thou the fire H784 yonder H1973 ; for H3588 they are hallowed H6942 .
|
38. தங்களுடைய ஆத்துமாக்களுக்கே கேடு உண்டாக்கின அந்தப் பாவிகளின் தூபகலசங்களைப் பலிபீடத்தை மூடும் தட்டையான தகடுகளாக அடிக்கவேண்டும்; அவர்கள் யெகோவாவுடைய சந்நிதியில் அவைகளைக் கொண்டுவந்ததால் அவைகள் பரிசுத்தமானது; அவைகள் இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்” என்றார்.
|
38. H853 The censers H4289 of these H428 sinners H2400 against their own souls H5315 , let them make H6213 H853 them broad H7555 plates H6341 for a covering H6826 of the altar H4196 : for H3588 they offered H7126 them before H6440 the LORD H3068 , therefore they are hallowed H6942 : and they shall be H1961 a sign H226 unto the children H1121 of Israel H3478 .
|
39. அப்படியே ஆசாரியனாகிய எலெயாசார் சுட்டெரிக்கப்பட்டவர்கள் கொண்டுவந்திருந்த வெண்கலத் தூபகலசங்களை எடுத்து,
|
39. And Eleazar H499 the priest H3548 took H3947 H853 the brazen H5178 censers H4289 , wherewith H834 they that were burnt H8313 had offered H7126 ; and they were made broad H7554 plates for a covering H6826 of the altar H4196 :
|
40. ஆரோனின் சந்ததியாக இல்லாத அந்நியன் ஒருவனும் யெகோவாவுடைய சந்நிதியில் தூபங்காட்ட வராதபடியும், கோராகைப்போலவும் அவனுடைய கூட்டத்தாரைப்போலவும் இல்லாதபடியும், இஸ்ரவேல் மக்களுக்கு நினைவுப்பொருளாக இருக்கும்படியாக, யெகோவா மோசேயைக்கொண்டு தனக்குச் சொன்னபடியே அவைகளைப் பலிபீடத்தை மூடும் தகடுகளாக அடிப்பித்தான்.
|
40. To be a memorial H2146 unto the children H1121 of Israel H3478 , that H4616 H834 no H3808 stranger H376 H2114 , which H1931 is not H3808 of the seed H4480 H2233 of Aaron H175 , come near H7126 to offer H6999 incense H7004 before H6440 the LORD H3068 ; that he be H1961 not H3808 as Korah H7141 , and as his company H5712 : as H834 the LORD H3068 said H1696 to him by the hand H3027 of Moses H4872 .
|
41. மறுநாளில் இஸ்ரவேல் மக்களின் சபையார் எல்லோரும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து: “நீங்கள் யெகோவாவின் மக்களைக் கொன்று போட்டீர்கள்” என்றார்கள்.
|
41. But on the morrow H4480 H4283 all H3605 the congregation H5712 of the children H1121 of Israel H3478 murmured H3885 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , saying H559 , Ye H859 have killed H4191 H853 the people H5971 of the LORD H3068 .
|
42. சபையார் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகக் கூடி ஆசரிப்புக் கூடாரத்திற்கு நேரே பார்க்கிறபோது, மேகம் அதை மூடினது, யெகோவாவின் மகிமை காணப்பட்டது.
|
42. And it came to pass H1961 , when the congregation H5712 was gathered H6950 against H5921 Moses H4872 and against H5921 Aaron H175 , that they looked H6437 toward H413 the tabernacle H168 of the congregation H4150 : and, behold H2009 , the cloud H6051 covered H3680 it , and the glory H3519 of the LORD H3068 appeared H7200 .
|
43. மோசேயும் ஆரோனும் ஆசரிப்புக் கூடாரத்திற்கு முன்பாக வந்தார்கள்;
|
43. And Moses H4872 and Aaron H175 came H935 before H413 H6440 the tabernacle H168 of the congregation H4150 .
|
44. அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
|
44. And the LORD H3068 spoke H1696 unto H413 Moses H4872 , saying H559 ,
|
45. “இந்தச் சபையாரை விட்டு விலகிப்போங்கள்; ஒரு நிமிடத்தில் அவர்களை அழிப்பேன் என்றார். அவர்கள் முகங்குப்புற விழுந்தார்கள்.
|
45. Get you up H7426 from among H4480 H8432 this H2063 congregation H5712 , that I may consume H3615 them as in a moment H7281 . And they fell H5307 upon H5921 their faces H6440 .
|
46. மோசே ஆரோனை நோக்கி: “நீ தூபகலசத்தை எடுத்து, பலிபீடத்திலிருக்கிற அக்கினியை அதில் போட்டு, அதின்மேல் தூபவர்க்கம் இட்டு, சீக்கிரமாகச் சபையினிடத்தில் போய், அவர்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்”; யெகோவாவுடைய சந்நிதியிலிருந்து கடுங்கோபம் புறப்பட்டது. வாதை துவங்கியது என்றான்.
|
46. And Moses H4872 said H559 unto H413 Aaron H175 , Take H3947 H853 a censer H4289 , and put H5414 fire H784 therein H5921 from off H4480 H5921 the altar H4196 , and put on H7760 incense H7004 , and go H1980 quickly H4120 unto H413 the congregation H5712 , and make an atonement H3722 for H5921 them: for H3588 there is wrath H7110 gone out H3318 from H4480 H6440 the LORD H3068 ; the plague H5063 is begun H2490 .
|
47. மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; மக்களுக்குள்ளே வாதை துவங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, மக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,
|
47. And Aaron H175 took H3947 as H834 Moses H4872 commanded H1696 , and ran H7323 into H413 the midst H8432 of the congregation H6951 ; and, behold H2009 , the plague H5063 was begun H2490 among the people H5971 : and he put on H5414 H853 incense H7004 , and made an atonement H3722 for H5921 the people H5971 .
|
48. செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது.
|
48. And he stood H5975 between H996 the dead H4191 and the living H2416 ; and the plague H4046 was stayed H6113 .
|
49. கோராகின் காரியத்தினால் செத்தவர்கள் தவிர, அந்த வாதையினால் செத்துப்போனவர்கள் 14,700 பேர்.
|
49. Now they that died H4191 in the plague H4046 were H1961 fourteen H702 H6240 thousand H505 and seven H7651 hundred H3967 , beside H4480 H905 them that died H4191 about H5921 the matter H1697 of Korah H7141 .
|
50. வாதை நிறுத்தப்பட்டது; அப்பொழுது ஆரோன் ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலுக்கு மோசேயினிடம் திரும்பிவந்தான். PE
|
50. And Aaron H175 returned H7725 unto H413 Moses H4872 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 : and the plague H4046 was stayed H6113 .
|