|
|
1. {ஆசாபின் மஸ்கீல் என்னும் போதகப் பாடல்.} என் மக்களே, என்னுடைய உபதேசத்தைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்கு உங்களுடைய செவிகளைச் சாயுங்கள்.
|
1. Maschil H4905 of Asaph H623 . Give ear H238 , O my people H5971 , to my law H8451 : incline H5186 your ears H241 to the words H561 of my mouth H6310 .
|
2. என்னுடைய வாயை உவமைகளால் திறப்பேன்; ஆரம்ப காலத்தின் மறைபொருட்களை வெளிப்படுத்துவேன்.
|
2. I will open H6605 my mouth H6310 in a parable H4912 : I will utter H5042 dark sayings H2420 of H4480 old H6924 :
|
3. அவைகளை நாங்கள் கேள்விப்பட்டு அறிந்தோம்; எங்களுடைய முன்னோர்கள் அவைகளை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.
|
3. Which H834 we have heard H8085 and known H3045 , and our fathers H1 have told H5608 us.
|
4. பின்வரும் சந்ததியான பிள்ளைகளுக்கு நாங்கள் அவைகளை மறைக்காமல், யெகோவாவின் துதிகளையும் அவருடைய பலத்தையும், அவர் செய்த அவருடைய அதிசயங்களையும் விவரிப்போம்.
|
4. We will not H3808 hide H3582 them from their children H4480 H1121 , showing H5608 to the generation H1755 to come H314 the praises H8416 of the LORD H3068 , and his strength H5807 , and his wonderful works H6381 that H834 he hath done H6213 .
|
5. அவர் யாக்கோபிலே சாட்சியை ஏற்படுத்தி, இஸ்ரவேலிலே வேதத்தை நிறுவி, அவைகளைத் தங்களுடைய பிள்ளைகளுக்கு அறிவிக்கும்படி நம்முடைய முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
|
5. For he established H6965 a testimony H5715 in Jacob H3290 , and appointed H7760 a law H8451 in Israel H3478 , which H834 he commanded H6680 H853 our fathers H1 , that they should make them known H3045 to their children H1121 :
|
6. இனிப் பிறக்கும் பிள்ளைகளாகிய பின்சந்ததியார் அதை அறிந்துகொண்டு, அவர்கள் எழும்பித் தங்களுடைய பிள்ளைகளுக்கு அவைகளைச் சொல்லும்படிக்கும்;
|
6. That H4616 the generation H1755 to come H314 might know H3045 them, even the children H1121 which should be born H3205 ; who should arise H6965 and declare H5608 them to their children H1121 :
|
7. தேவன்மேல் அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை வைத்து, தேவனுடைய செயல்களை மறக்காமல், அவர் கற்பனைகளைக் கைக்கொள்ளும்படிக்கும்;
|
7. That they might set H7760 their hope H3689 in God H430 , and not H3808 forget H7911 the works H4611 of God H410 , but keep H5341 his commandments H4687 :
|
8. இருதயத்தைச் செவ்வைப்படுத்தாமலும், தேவனை உறுதியாகப் பற்றிக்கொள்ளாமலும் இருந்த முரட்டாட்டமும் கலகமுமுள்ள சந்ததியாகிய தங்களுடைய பிதாக்களுக்கு அவர்கள் ஒப்பாகாதபடிக்கும், இவைகளைக் கட்டளையிட்டார்.
|
8. And might not H3808 be H1961 as their fathers H1 , a stubborn H5637 and rebellious H4784 generation H1755 ; a generation H1755 that set not their heart aright H3559 H3808 H3820 , and whose spirit H7307 was not H3808 steadfast H539 with H854 God H410 .
|
9. ஆயுதமணிந்த வில்வீரர்களான எப்பிராயீமீர்கள் யுத்தநாளிலே முதுகு காட்டினார்கள்.
|
9. The children H1121 of Ephraim H669 , being armed H5401 , and carrying H7411 bows H7198 , turned back H2015 in the day H3117 of battle H7128 .
|
10. அவர்கள் தேவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமலும், அவருடைய கட்டளைகளின்படி நடக்கச் சம்மதிக்காமலும்,
|
10. They kept H8104 not H3808 the covenant H1285 of God H430 , and refused H3985 to walk H1980 in his law H8451 ;
|
11. அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குக் காண்பித்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
|
11. And forgot H7911 his works H5949 , and his wonders H6381 that H834 he had showed H7200 them.
|
12. அவர்களுடைய முன்னோர்களுக்கு முன்பாக, எகிப்து தேசத்துச் சோவான் வெளியிலே, அவர் அதிசயமானவைகளைச் செய்தார்.
|
12. Marvelous things H6382 did H6213 he in the sight H5048 of their fathers H1 , in the land H776 of Egypt H4714 , in the field H7704 of Zoan H6814 .
|
13. கடலைப் பிளந்து, அவர்களைக் கடக்கச்செய்து, தண்ணீரைக் குவியலாக நிற்கும்படிச் செய்தார்.
|
13. He divided H1234 the sea H3220 , and caused them to pass through H5674 ; and he made the waters H4325 to stand H5324 as H3644 a heap H5067 .
|
14. பகலிலே மேகத்தினாலும், இரவுமுழுவதும் அக்கினி வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
|
14. In the daytime H3119 also he led H5148 them with a cloud H6051 , and all H3605 the night H3915 with a light H216 of fire H784 .
|
15. பாலைவனத்திலே கன்மலைகளைப் பிளந்து, மகா ஆழங்களிலிருந்து தண்ணீரை அவர்களுக்குக் குடிக்கக் கொடுத்தார்.
|
15. He cleaved H1234 the rocks H6697 in the wilderness H4057 , and gave them drink H8248 as out of the great H7227 depths H8415 .
|
16. கன்மலையிலிருந்து நீரோட்டங்களைப் புறப்படச்செய்து, தண்ணீரை நதிபோல ஓடிவரும்படி செய்தார்.
|
16. He brought streams also out H3318 H5140 of the rock H4480 H5553 , and caused waters H4325 to run down H3381 like rivers H5104 .
|
17. என்றாலும், அவர்கள் பின்னும் அவருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, பாலைவனத்திலே உன்னதமான தேவனுக்குக் கோபம் மூட்டினார்கள்.
|
17. And they sinned H2398 yet H5750 more H3254 against him by provoking H4784 the most High H5945 in the wilderness H6723 .
|
18. தங்களுடைய ஆசைக்கேற்ற உணவைக்கேட்டு, தங்களுடைய இருதயத்தில் தேவனைப் பரீட்சைபார்த்தார்கள்.
|
18. And they tempted H5254 God H410 in their heart H3824 by asking H7592 meat H400 for their lust H5315 .
|
19. அவர்கள் தேவனுக்கு விரோதமாகப் பேசி: தேவன் பாலைவனத்திலே உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தக்கூடுமோ?
|
19. Yea , they spoke H1696 against God H430 ; they said H559 , Can H3201 God H410 furnish H6186 a table H7979 in the wilderness H4057 ?
|
20. இதோ அவர் கன்மலையை அடித்ததினால் தண்ணீர் புறப்பட்டு, நதிகளாகப் புரண்டுவந்தது; அவர் அப்பத்தையும் கொடுக்கமுடியுமோ? தம்முடைய மக்களுக்கு இறைச்சியையும் ஆயத்தப்படுத்துவாரோ என்றார்கள்.
|
20. Behold H2005 , he smote H5221 the rock H6697 , that the waters H4325 gushed out H2100 , and the streams H5158 overflowed H7857 ; can H3201 he give H5414 bread H3899 also H1571 ? can he provide H3559 flesh H7607 for his people H5971 ?
|
21. ஆகையால் யெகோவா அதைக் கேட்டுக் கோபங்கொண்டார்; அவர்கள் தேவனை விசுவாசிக்காமலும், அவருடைய இரட்சிப்பை நம்பாமலும் போனதினால்,
|
21. Therefore H3651 the LORD H3068 heard H8085 this , and was wroth H5674 : so a fire H784 was kindled H5400 against Jacob H3290 , and anger H639 also H1571 came up H5927 against Israel H3478 ;
|
22. யாக்கோபுக்கு விரோதமாக நெருப்பு பற்றியெரிந்தது; இஸ்ரவேலுக்கு விரோதமாகக் கோபம் மூண்டது.
|
22. Because H3588 they believed H539 not H3808 in God H430 , and trusted H982 not H3808 in his salvation H3444 :
|
23. அவர் உயரத்திலுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டு, வானத்தின் கதவுகளைத் திறந்து,
|
23. Though he had commanded H6680 the clouds H7834 from above H4480 H4605 , and opened H6605 the doors H1817 of heaven H8064 ,
|
24. மன்னாவை அவர்களுக்கு ஆகாரமாகப் பெய்யச்செய்து, வானத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
|
24. And had rained down H4305 manna H4478 upon H5921 them to eat H398 , and had given H5414 them of the corn H1715 of heaven H8064 .
|
25. தூதர்களின் அப்பத்தை மனிதன் சாப்பிட்டான்; அவர்களுக்கு ஆகாரத்தைப் பூரணமாக அனுப்பினார்.
|
25. Man H376 did eat H398 angels H47 ' food H3899 : he sent H7971 them meat H6720 to the full H7648 .
|
26. வானத்திலே கிழக்கு காற்றை வீசச்செய்து, தம்முடைய வல்லமையினால் தென்றலையும் வீசச்செய்து,
|
26. He caused an east wind H6921 to blow H5265 in the heaven H8064 : and by his power H5797 he brought H5090 in the south wind H8486 .
|
27. இறைச்சியை தூளைப்போலவும், சிறகுள்ள பறவைகளைக் கடற்கரை மணலளவாகவும் பெய்யச்செய்து,
|
27. He rained H4305 flesh H7607 also upon H5921 them as dust H6083 , and feathered H3671 fowls H5775 like as the sand H2344 of the sea H3220 :
|
28. அவைகளை அவர்கள் முகாமின் நடுவிலும், அவர்கள் கூடாரங்களைச் சுற்றிலும் இறங்கச்செய்தார்.
|
28. And he let it fall H5307 in the midst H7130 of their camp H4264 , round about H5439 their habitations H4908 .
|
29. அவர்கள் சாப்பிட்டு திருப்தியடைந்தார்கள்; அவர்கள் ஆசைப்பட்டதை அவர்களுக்குக் கொடுத்தார்.
|
29. So they did eat H398 , and were well H3966 filled H7646 : for he gave H935 them their own desire H8378 ;
|
30. அவர்கள் தங்களுடைய ஆசையை வெறுக்கவில்லை; அவர்களுடைய உணவு அவர்களுடைய வாயில் இருக்கும்போதே.
|
30. They were not H3808 estranged H2114 from their lust H4480 H8378 . But while their meat H400 was yet H5750 in their mouths H6310 ,
|
31. தேவகோபம் அவர்கள்மேல் எழும்பி, அவர்களில் கொழுத்தவர்களை அழித்து, இஸ்ரவேலில் வாலிபர்களை விழச்செய்தார்.
|
31. The wrath H639 of God H430 came H5927 upon them , and slew H2026 the fattest H4924 of them , and smote down H3766 the chosen H970 men of Israel H3478 .
|
32. இவையெல்லாம் நடந்தும், அவர் செய்த அதிசயங்களை அவர்கள் நம்பாமல், பின்னும் பாவஞ்செய்தார்கள்.
|
32. For all H3605 this H2063 they sinned H2398 still H5750 , and believed H539 not H3808 for his wondrous works H6381 .
|
33. ஆதலால் அவர்கள் நாட்களை வீணாகவும், அவர்கள் வருடங்களைப் பயங்கரத்திலும் கழியச்செய்தார்.
|
33. Therefore their days H3117 did he consume H3615 in vanity H1892 , and their years H8141 in trouble H928 .
|
34. அவர்களை அவர் கொல்லும்போது அவரைக்குறித்து விசாரித்து, அவர்கள் திரும்பிவந்து தேவனை அதிகாலமே தேடி;
|
34. When H518 he slew H2026 them , then they sought H1875 him : and they returned H7725 and inquired early H7836 after God H410 .
|
35. தேவன் தங்களுடைய கன்மலையென்றும், உன்னதமான தேவன் தங்களுடைய மீட்பர் என்றும், நினைவுகூர்ந்தார்கள்.
|
35. And they remembered H2142 that H3588 God H430 was their rock H6697 , and the high H5945 God H410 their redeemer H1350 .
|
36. ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாயினால் அவருக்கு வஞ்சகம் பேசி, தங்களுடைய நாவினால் அவரிடத்தில் பொய்சொன்னார்கள்.
|
36. Nevertheless they did flatter H6601 him with their mouth H6310 , and they lied H3576 unto him with their tongues H3956 .
|
37. அவர்களுடைய இருதயம் அவரிடத்தில் நிலைவரப்படவில்லை; அவருடைய உடன்படிக்கையில் அவர்கள் உண்மையாக இருக்கவில்லை.
|
37. For their heart H3820 was not right H3808 H3559 with H5973 him, neither H3808 were they steadfast H539 in his covenant H1285 .
|
38. அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராக அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது கடுங்கோபம் முழுவதையும் எழுப்பாமல், அநேகமுறை தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
|
38. But he H1931 , being full of compassion H7349 , forgave H3722 their iniquity H5771 , and destroyed H7843 them not H3808 : yea, many H7235 a time turned he his anger away H639 H7725 , and did not H3808 stir up H5782 all H3605 his wrath H2534 .
|
39. அவர்கள் மாம்சமென்றும், திரும்பிவராமல் அகலுகிற காற்றென்றும் நினைவுகூர்ந்தார்.
|
39. For he remembered H2142 that H3588 they H1992 were but flesh H1320 ; a wind H7307 that passeth away H1980 , and cometh not again H3808 H7725 .
|
40. எத்தனைமுறையோ பாலைவனத்திலே அவருக்குக் கோபமூட்டி, பாலைவனத்திலே அவரை வேதனைப்படுத்தினார்கள்.
|
40. How oft H4100 did they provoke H4784 him in the wilderness H4057 , and grieve H6087 him in the desert H3452 !
|
41. அவர்கள் திரும்பி தேவனைப் பரீட்சை பார்த்து, இஸ்ரவேலின் பரிசுத்த தேவனை எரிச்சலூட்டினார்கள்.
|
41. Yea , they turned back H7725 and tempted H5254 God H410 , and limited H8428 the Holy One H6918 of Israel H3478 .
|
42. அவருடைய கரத்தையும், அவர் தங்களை எதிரிகளுக்கு விலக்கி மீட்ட நாளையும் நினைக்காமல் போனார்கள்.
|
42. They remembered H2142 not H3808 H853 his hand H3027 , nor the day H3117 when H834 he delivered H6299 them from H4480 the enemy H6862 .
|
43. அவர் எகிப்திலே தம்முடைய அடையாளங்களையும், சோவான் வெளியிலே தம்முடைய அற்புதங்களையும் செய்தார்.
|
43. How H834 he had wrought H7760 his signs H226 in Egypt H4714 , and his wonders H4159 in the field H7704 of Zoan H6814 :
|
44. அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாற்றி, அவர்களுடைய ஆறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்கமுடியாதபடி செய்தார்.
|
44. And had turned H2015 their rivers H2975 into blood H1818 ; and their floods H5140 , that they could not H1077 drink H8354 .
|
45. அவர்களை அழிக்கும்படி வண்டு வகைகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
|
45. He sent H7971 divers sorts of flies H6157 among them , which devoured H398 them ; and frogs H6854 , which destroyed H7843 them.
|
46. அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும், அவர்களுடைய உழைப்பின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்.
|
46. He gave H5414 also their increase H2981 unto the caterpillar H2625 , and their labor H3018 unto the locust H697 .
|
47. கல்மழையினால் அவர்களுடைய திராட்சைச்செடிகளையும், ஆலாங்கட்டியினால் அவர்களுடைய அத்திமரங்களையும் அழித்து,
|
47. He destroyed H2026 their vines H1612 with hail H1259 , and their sycamore trees H8256 with frost H2602 .
|
48. அவர்களுடைய மிருகங்களைக் கல்மழைக்கும், அவர்களுடைய ஆடுமாடுகளை இடிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
|
48. He gave up H5462 their cattle H1165 also to the hail H1259 , and their flocks H4735 to hot thunderbolts H7565 .
|
49. தமது கடுமையான கோபத்தையும், மூர்க்கத்தையும், பிரச்சனையையும், உபத்திரவத்தையும், தீங்குசெய்யும் தூதர்களையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.
|
49. He cast H7971 upon them the fierceness H2740 of his anger H639 , wrath H5678 , and indignation H2195 , and trouble H6869 , by sending H4917 evil H7451 angels H4397 among them .
|
50. அவர் தம்முடைய கோபத்திற்கு வழிதிறந்து, அவர்களுடைய ஆத்துமாவை மரணத்திற்கு விலக்கிக் காக்காமல், அவர்கள் உயிரைக் கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
|
50. He made H6424 a way H5410 to his anger H639 ; he spared H2820 not H3808 their soul H5315 from death H4480 H4194 , but gave H5462 their life H2416 over to the pestilence H1698 ;
|
51. எகிப்திலே முதற்பிறந்த பிள்ளைகள் அனைத்தையும், காமின் * காமின் எகிப்து தேசத்தை குறிக்கிறது. காம் நோவாவின் குமாரன், எகிப்தின் மூதாதையர் என்று ஆதியாகமம் 10:6 ல் சொல்லியிருக்கிறது கூடாரங்களிலே அவர்களுடைய பெலனில் முதற்பிறந்த எல்லோரையும் அழித்து;
|
51. And smote H5221 all H3605 the firstborn H1060 in Egypt H4714 ; the chief H7225 of their strength H202 in the tabernacles H168 of Ham H2526 :
|
52. தம்முடைய மக்களை ஆடுகளைப்போல் புறப்படச்செய்து, அவர்களை வனாந்திரத்திலே மந்தையைப்போல் கூட்டிக்கொண்டுபோய்;
|
52. But made his own people H5971 to go forth H5265 like sheep H6629 , and guided H5090 them in the wilderness H4057 like a flock H5739 .
|
53. அவர்கள் பயப்படாதபடிக்கு அவர்களைப் பத்திரமாக வழிநடத்தினார்; அவர்கள் எதிரிகளைக் கடல் மூடிப்போட்டது.
|
53. And he led H5148 them on safely H983 , so that they feared H6342 not H3808 : but the sea H3220 overwhelmed H3680 their enemies H341 .
|
54. அவர்களைத் தமது பரிசுத்த ஸ்தலத்தின் எல்லைவரைக்கும், தமது வலதுகரம் சம்பாதித்த இந்த மலைவரைக்கும் அழைத்துக்கொண்டுவந்து,
|
54. And he brought H935 them to H413 the border H1366 of his sanctuary H6944 , even to this H2088 mountain H2022 , which his right hand H3225 had purchased H7069 .
|
55. அவர்கள் முகத்திற்கு முன்பாக தேசங்களைத் துரத்திவிட்டு, தேசத்தை நூல்போட்டுப் பங்கிட்டு, அவர்களுடைய கூடாரங்களில் இஸ்ரவேலின் கோத்திரங்களைக் குடியேற்றினார்.
|
55. He cast out H1644 the heathen H1471 also before H4480 H6440 them , and divided H5307 them an inheritance H5159 by line H2256 , and made the tribes H7626 of Israel H3478 to dwell H7931 in their tents H168 .
|
56. ஆனாலும் அவர்கள் உன்னதமான தேவனைப் பரீட்சை பார்த்து, அவருக்குக் கோபம் மூட்டி, அவருடைய சாட்சிகளைக் கைக்கொள்ளாமல்போய்,
|
56. Yet they tempted H5254 and provoked H4784 H853 the most high H5945 God H430 , and kept H8104 not H3808 his testimonies H5713 :
|
57. தங்களுடைய முன்னோர்களைப்போல வழிவிலகி, துரோகம்செய்து, மோசம்போக்கும் வில்லைப்போல் துவண்டு,
|
57. But turned back H5472 , and dealt unfaithfully H898 like their fathers H1 : they were turned aside H2015 like a deceitful H7423 bow H7198 .
|
58. தங்களுடைய மேடைகளினால் அவருக்குக் கோபம் மூட்டி, தங்களுடைய விக்கிரகங்களினால் எரிச்சல் உண்டாக்கினார்கள்.
|
58. For they provoked him to anger H3707 with their high places H1116 , and moved him to jealousy H7065 with their graven images H6456 .
|
59. தேவன் அதைக் கேட்டு கடுங்கோபமடைந்து, இஸ்ரவேலை மிகவும் வெறுத்து,
|
59. When God H430 heard H8085 this , he was wroth H5674 , and greatly H3966 abhorred H3988 Israel H3478 :
|
60. தாம் மனிதர்களுக்குள்ளே போட்ட கூடாரமாகிய சீலோவிலுள்ள † சீலொவோம் எருசலேமின் வடக்கே 32 கிமீ தூரத்தில் இருக்கிறது. இஸ்ரவேலின் ஆரம்ப நாட்களில் தேவனுடைய உடன்பட்டிக்கைபெட்டி சீலோவோமில் வைக்கப்பட்டிருந்தது. வாசஸ்தலத்தை விட்டுவிலகி,
|
60. So that he forsook H5203 the tabernacle H4908 of Shiloh H7887 , the tent H168 which he placed H7931 among men H120 ;
|
61. தமது பலமாகிய இஸ்ரவேலர்களை சிறையிருப்புக்கும், தமது மகிமையான தம் ஜனத்தை எதிரியின் கைக்கும் ஒப்புக்கொடுத்து,
|
61. And delivered H5414 his strength H5797 into captivity H7628 , and his glory H8597 into the enemy H6862 's hand H3027 .
|
62. தமது மக்களை வாளுக்கு இரையாக்கி, தமது சுதந்தரத்தின்மேல் கோபங்கொண்டார்.
|
62. He gave H5462 his people H5971 over H5462 also unto the sword H2719 ; and was wroth H5674 with his inheritance H5159 .
|
63. அவர்கள் வாலிபர்களை நெருப்பு எரித்தது, அவர்களுடைய கன்னிப்பெண்கள் வாழ்க்கைப்படாமலிருந்தார்கள்.
|
63. The fire H784 consumed H398 their young men H970 ; and their maidens H1330 were not H3808 given to marriage H1984 .
|
64. அவர்களுடைய ஆசாரியர்கள் வாளால் விழுந்தார்கள், அவர்களுடைய விதவைகள் அழவில்லை.
|
64. Their priests H3548 fell H5307 by the sword H2719 ; and their widows H490 made no H3808 lamentation H1058 .
|
65. அப்பொழுது ஆண்டவர் தூக்கம் தெளிந்தவனைப்போலவும், திராட்சைரசத்தால் கெம்பீரிக்கிற பலசாலியைப்போலவும் விழித்து,
|
65. Then the Lord H136 awaked H3364 as one out of sleep H3463 , and like a mighty man H1368 that shouteth H7442 by reason of wine H4480 H3196 .
|
66. தம்முடைய எதிரிகளைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரச்செய்தார்.
|
66. And he smote H5221 his enemies H6862 in the hinder parts H268 : he put H5414 them to a perpetual H5769 reproach H2781 .
|
67. அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
|
67. Moreover he refused H3988 the tabernacle H168 of Joseph H3130 , and chose H977 not H3808 the tribe H7626 of Ephraim H669 :
|
68. யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
|
68. But chose H977 H853 the tribe H7626 of Judah H3063 , H853 the mount H2022 Zion H6726 which H834 he loved H157 .
|
69. தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
|
69. And he built H1129 his sanctuary H4720 like H3644 high H7311 palaces , like the earth H776 which he hath established H3245 forever H5769 .
|
70. தம்முடைய ஊழியனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
|
70. He chose H977 David H1732 also his servant H5650 , and took H3947 him from the sheepfolds H4480 H4356 H6629 :
|
71. கறவலாடுகளின் பின்னாகத் திரிந்த அவனை, தம்முடைய மக்களாகிய யாக்கோபையும் தம்முடைய சுதந்தரமாகிய இஸ்ரவேலையும் மேய்ப்பதற்காக, அழைத்துக்கொண்டுவந்தார்.
|
71. From following H4480 H310 the ewes great with young H5763 he brought H935 him to feed H7462 Jacob H3290 his people H5971 , and Israel H3478 his inheritance H5159 .
|
72. இவன் அவர்களைத் தன்னுடைய இருதயத்தின் உண்மையின்படியே மேய்த்து, தன்னுடைய கைகளின் திறமையினால் அவர்களை நடத்தினான். PE
|
72. So he fed H7462 them according to the integrity H8537 of his heart H3824 ; and guided H5148 them by the skilfulness H8394 of his hands H3709 .
|